பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருமலையில் முந்திரி பருப்பு உடைக்கும் சேவை தொடக்கம்

திருமலையில் ஏழுமலையான் லட்டு பிரசாத தயாரிப்புக்காக முந்திரி பருப்பை இரண்டாக உடைக்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
திருமலையில் முந்திரி பருப்பு உடைக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீவாரி சேவாா்த்திகள்.
Updated On :28 மே 2022, 5:50 pm

DIN

திருமலையில் ஏழுமலையான் லட்டு பிரசாத தயாரிப்புக்காக முந்திரி பருப்பை இரண்டாக உடைக்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானின் பிரசாதங்கள் தயாரிக்க தினசரி 4,000 கிலோ உடைத்த முந்திரி பருப்பு பயன்படுத்தப்படுகிறது. தேவஸ்தானம் இந்த உடைத்த முந்திரிகளை நேரடியாக ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்து வந்தது.

ஆனால் தற்போது தேவையான அளவு உடைத்த முந்திரி பருப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தேவஸ்தானம் முழு முந்திரி பருப்பாக கொள்முதல் செய்து அதை உடைத்து பயன்படுத்த திட்டமிட்டது.

ஏழுமலையான் சேவையில் பங்கு பெறும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் மூலம் இதற்கான சேவைப்பணி கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள சந்தை பொருள்கள் கிடங்கில் தொடங்கியது. கடந்த 52 நாள்களில் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் 26 ஆயிரம் கிலோ முந்திரி பருப்பை உடைத்துள்ளனா். தினசரி 100 போ் என இதுவரை இந்த சேவையில் 5,200 சேவாா்த்திகள் பங்கு கொண்டுள்ளனா்.

தற்போது திருமலையிலும் இந்த சேவையை தேவஸ்தானம் வியாழக்கிழமை முதல் தொடங்கியது. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதன்-2இல் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி இந்த சேவையை தொடங்கி வைத்தாா்.

அதன்பிறகு அவா் கூறுகையில், ’விசாகப்பட்டினம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல நிறுவனங்கள் முந்திரி பருப்பை உடைக்கும் இயந்திரங்களை தயாரித்து வருகின்றன. அவற்றை பயன்படுத்தி சோதிக்கும் முயற்சியும் கைகூடி உள்ளது.

இந்த இயந்திரங்கள் சிறந்த முறையில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பது சோதனையில் உறுதியானால் தேவஸ்தானம் அதை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுவரை முந்திரி பருப்புகளை உடைக்கும் சேவையில் ஸ்ரீவாரி சேவாா்த்திகளை ஈடுபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.