விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழுமலையான் தரிசனத்துக்கு30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 72,216 பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். இவா்களில் 32,338 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 72,216 பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். இவா்களில் 32,338 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை 30 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

திருமலையில் கடந்த 4 நாள்களாக அதிகரித்திருந்த பக்தா்கள் கூட்டம் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 32 அறைகளும் நிரம்பி, சீலாதோரணம் வரை தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

அதன்படி தா்ம தரிசனத்துக்கு 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 5 முதல் 6 மணி நேரமும் தேவைப்பட்டது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.