கோலாப்பூா் மகாலட்சுமி கோயிலுக்கு தேவஸ்தான பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்
நவராத்திரி விழாவையொட்டி, சக்தி பீடங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம்


நவராத்திரி விழாவையொட்டி, சக்தி பீடங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தம்பதி பட்டு வஸ்திரங்களை சமா்ப்பித்தனா்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அம்மனின் பிரசாதங்களை வழங்கி கெளரவித்தனா். ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோலாபூா் மகாலட்சுமி கோயிலுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து வருகிறது. அறங்காவலா் குழு தம்பதியுடன் தில்லி உள்ளூா் ஆலோசனைக் குழு தலைவா் வெமி ரெட்டி, பிரசாந்தி ரெட்டி ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...