உண்டியல் காணிக்கை ரூ.3.91 கோடி
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணம் எனப் பிரித்து கணக்கிட்டு, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.91 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...