திருப்பதி கோதண்டராமருக்கு வெள்ளி சாமரங்கள் நன்கொடை
திருப்பதியில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு இரு வெள்ளி சாமரங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


திருப்பதியில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு இரு வெள்ளி சாமரங்கள் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோதண்டராம சுவாமி கோயிலுக்கு திருப்பதியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரய்யா- உதயலட்சுமி தம்பதி ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளியினால் ஆன 2 சாமரங்களை நன்கொடையாக வழங்கினா்.
தாம்பளத்தில் மங்கலப் பொருள்களுடன் இந்த வெள்ளி சாமரங்களை வைத்து கோயில் அதிகாரி நாகரத்னம்மாவிடம் அளித்தனா்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட கோயில் அதிகாரி, தினமும் கோதண்டராம சுவாமி சேவையில் இவை பயன்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...