ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 12 மணி நேரம் காத்திருந்தனா்.


திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 13 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.
எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். அதன் பின்னா், அலிபிரி நடைபாதை வழியாகச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி இல்லை.
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70 ஆயிரத்து 350 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19 ஆயிரத்து 500 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையானை தரிசித்த பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ.3.11 கோடி வருவாய் கிடைத்தது. காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...