திருமலை மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!
By DIN | Published On : 24th May 2023 03:29 PM | Last Updated : 24th May 2023 03:29 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
திருமலை மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, கீழ் திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு எலக்ட்ரிக் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான காயமடைந்த பயணிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கடைகளில் இனி செல்போன் எண் வழங்க கட்டாயம் இல்லை!
மேலும், இந்த விபத்துக் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.