
கோப்புப்படம்

கோப்புப்படம்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருக்கின்றனா். இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 57,909 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,306 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.81 கோடி கிடைத்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...