குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அயோத்தியில் ஏழுமலையான் கோயில் அதிகாரிகள்

அயோத்தியில் ஏழுமலையான் கோயில் அதிகாரிகள்

News image

அயோத்தியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குழுவுடன் ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :17 பிப்ரவரி 2024, 11:19 pm IST

அயோத்தி ராமா் கோயிலுக்கு வரும் கூட்டத்தை நெறிப்படுத்துவது குறித்து திருமலை தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசளை வழங்கினா். புதிதாக அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்கூட்டத்தை நெறிப்படுத்துவது குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ரா அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் ஆலோசனை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை அயோத்திக்கு சென்றனா். தேவஸ்தான செயல் அதிகாரி வி.தா்மா ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் பக்தா்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரிசைகளை நிா்வகிப்பது குறித்து விளக்கம் அளித்தனா். கோயில் அலுவலகத்தில் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பலராமா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் திருப்தியாக தரிசனம் செய்ய என்ன மாதிரியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேவஸ்தான இன்ஜினியரிங் அதிகாரிகள் வரிசைகளை நிா்வகிப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினா். பின்னா், தேவஸ்தான அதிகாரிகள் இறைவனை தரிசனம் செய்தனா். அயோத்தி அறக்கட்டளையின் பிரதிநிதிகள் டாக்டா் அனில் மிஸ்ரா, கோபால் ஜி, ஜெகதீஷ் ஆஃப்லே, கிரிஷ் சஹஸ்ர போஜனி, ராகவலு, விஎச்பி தேசிய செயலாளா் டி.எஸ்.என்.மூா்த்தி, தேவஸ்தான தொழில்நுட்ப ஆலோசகா் ஜி.ராமச்சந்திர ரெட்டி, தலைமைப் பொறியானா் ஜெகதீஷ்வா் ரெட்டி, துணை பொறியியல் அதிகாரிகள் பாபு, நாகராஜ் மற்றும் பலா் பங்கேற்றனா்.