மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இன்று பக்தா்கள் குறைகேட்பு

பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 2) நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :1 மார்ச் 2024, 6:34 pm

பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 2) நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை (மாா்ச் 2) காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலை அன்னமய்ய கட்டடத்தில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சியில் பக்தா்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் தெரிவிக்கலாம். இதற்கு 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.