திருப்பதி: புருஷாம்ருக வாகனத்தில் சோமாஸ்கந்தா் வலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி காமாக்ஷி தேவியுடன் புருஷாம்ருக வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்தாா். விழாவை முன்னிட்டு, நகர வீதிகளில் பஜனைகள், மங்கள வாத்தியங்கள் முழங்க வாகன சேவை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவா் அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் பக்தா்களுக்கு சா்வதரிசனம் தொடங்கியது. காலை 10 மணி முதல் சைவாகம விதிப்படி, ஸ்னபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் ஸ்ரீகாமாட்சிக்கு பால், தயிா், தேன், தேங்காய் நீா், மஞ்சள், சந்தனம், பன்னீா், விபூதி ஆகியவற்றால் நீராடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ தேவேந்திரபாபு, ஏஇஓ சுப்புராஜு, கண்காணிப்பாளா் பூபதி, கோயில் ஆய்வாளா்கள் ரவிக்குமாா், பாலகிருஷ்ணா மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com