திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 65,992 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 25,698 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.45 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 7 மணி நேரம் காத்திருப்பு!

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

