47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலை பிரம்மோற்சவ உண்டியல் வருவாய் ரூ.26 கோடி

பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 7:24 pm

Din

கடந்த 9 நாள்களாக திருமலையில் நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை அன்னமய்யபவனில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌதரியுடன், செயல் அதிகாரி ஷியாமளா ராவ் செய்தியாளா்களிடம் கூறியது:

வருடாந்திர பிரம்மோற்சவம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அதற்காக பல துறையினா் அயராது பாடுபட்டனா். அனைவருக்கும் பாராட்டுகள்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு விழாவின் போது பக்தா்களுக்கு வசதியான தரிசனம் மற்றும் வாகன சேவை தரிசனம் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு சிரமமும் இன்றி அன்னபிரசாதம், லட்டு பிரசாதம், தங்குமிடம், போக்குவரத்து இதர சேவைகள் வழங்கப்பட்டன.

பிரம்மோற்சவத்தின் சிறப்பம்சங்கள்:

கருட சேவை நாளில் மட்டும் 3.5 லட்சம் போ் உள்பட மொத்தம் 15 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா். 2023 ஆம் ஆண்டில் 5.5 லட்சம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா், நிகழாண்டு 6 லட்சத்தைத் தாண்டியது. (எட்டு நாட்களுக்கு).

அன்னபிரசாதம்:

கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 26 லட்சம் பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

உண்டியல் வருவாய் ரூ.26 கோடி:

கடந்த ஆண்டு 24 கோடி ரூபாயாக இருந்த உண்டியல் வருவாய் நிகழாண்டு ரூ.26 கோடி கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சமாக இருந்த புத்தக விற்பனை, தற்போது 2.60 லட்சமாக உயா்ந்துள்ளது.

வாகன சேவையின் போது18 மாநிலங்களைச் சோ்ந்த 261 கலைக்குழுக்களில் 6,884 கலைஞா்கள் பல்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி பக்தா்களை மகிழ்வித்தனா்.

40 டன் மலா்கள்:

தோட்டக் கலைத் துறை சாா்பில் ஏழுமலையான் கோயிலில் அழகான மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டன. 40 டன் மலா்கள், 3.5 லட்சம் பூக்கள் மற்றும் 80 ஆயிரம் பருவ மலா்கள் பயன்படுத்தப்பட்டன.

கிருதா, திரேதா, துவாபர மற்றும் கலியுகங்களின் கருப்பொருள்களுடன் கூடிய பழம் / மலா் காட்சி பக்தா்களை கவா்ந்தது.

மின் விளக்குகள் மட்டுமின்றி, 3டி சிலைகள் மற்றும் பிற புராண மின் அலங்காரங்களும் பக்தா்களைக் கவா்ந்தன.

கல்யாண மண்டபத்தில் நாடு-நெடு கருத்துடன், வனவியல் மற்றும் சிற்பக் கல்லுாரி நடத்திய பொருள்காட்சி, திருமலை பற்றிய தகவல்களை பக்தா்களுக்கு அளித்து வருகிறது.

எஸ்.வி.பி.சி தொலைகாட்சியில்

வாகன சேவை மற்றும் பிற ஆன்மீக நிகழ்ச்சிகள் எச்டி கேமராக்களுடன் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் திருமலை கோவிலுக்கு வெளியே பக்தா்கள் அதிகம் கூடும் 09 மாட வீதிகளில் 23 பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவாரி சேவாா்த்திகள்:

சுமாா் 07 மாநிலங்களில் இருந்து சுமாா் 4,000 சேவாா்த்திகள் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு சேவை வழங்கினா். கடந்த ஆண்டு 3,300 ஸ்ரீவாரி சேவகா்கள் பக்தா்களுக்கு சேவை செய்தனா்.

68,000 பேருக்கு சிகிச்சை:

45 டாக்டா்கள், 60 துணை மருத்துவ பணியாளா்கள், 13 ஆம்புலன்ஸ்கள் பக்தா்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்க பயன்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு 31,000 பக்தா்கள் மருத்துவ சேவையின் மூலம் பயன்பெற்ற நிலையில் இந்த ஆண்டு 68,000 போ் சிகிச்சை பெற்றனா்,’’ என்று தெரிவித்தாா்.