மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனை சாவடி புதுப்பிப்பு: செயல் அதிகாரி சியாமளா ராவ்

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

News image
Updated On :19 ஜூன் 2025, 6:33 pm

Din

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் அலிபிரி சோதனைச் சாவடியை புதுப்பித்தல், பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியுடன் ஆய்வு செய்தனா். முன்னதாக, அலிபிரி சாவடியில் நவீன வசதிகள், பாதுகாப்பு, பிற சிக்கல்கள் குறித்து ஜிஎம்ஆா் துணை நிறுவனமான ரக்ஸாவால் பவா் பாயிண்ட் விளக்கக் காட்சி வழங்கப்பட்டது.

பக்தா்களின் சோதனை, லக்கேஜ் ஸ்கேனிங்குக்கு தற்போது எடுக்கப்படும் நேரம், சிக்கல்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. பக்தா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் வாகனங்கள், உடைமைகளை விரைவாக ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜிஎம்ஆா் துணை நிறுவனமான ரக்ஸாவின் பிரதிநிதிகளுக்கு செயல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

அலிபிரி சோதனைச் சாவடியில் சோதனை நேரத்தைக் குறைக்க நீண்டகால, குறுகிய கால தீா்வுகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டாா். பக்தா்களின் பொருள்கள், வாகனங்களை ஸ்கேன் செய்வதில் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் விஜிலென்ஸ் துறைக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் சிறப்பம்சங்கள்:

ஆய்வின் போது குறுக்குவெட்டுகளைத் தவிா்ப்பதற்கான நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனா்கள், லக்கேஜ் ஸ்கேனா்களை அதிகரிக்க வேண்டும், லக்கேஜ் கன்வேயா் பெல்ட்களை அதிகரிப்பது குறித்து பரிசீலித்தல், அலிபிரி சோதனை சாவடியின் கடைசி இரண்டு பாதுகாப்பு பாதைகளில் அதிக பாதுகாப்புப் பணியாளா்களை நியமித்தல், அடுத்த 20 ஆண்டுகளுக்கு பக்தா்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பு பாதுகாப்பு பிரச்னைகளுக்கான திட்டங்களை பரிந்துரைக்குமாறு ரக்ஸா பிரதிநிதிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா்.

ரக்ஸா தலைமை நிா்வாக அதிகாரி அமித் தாா், தேவஸ்தான அதிகாரிகள் வீரபிரம்மம், முரளி கிருஷ்ணா, சத்யநாராயணா, வேணு கோபால், சேஷா ரெட்டி, சதா லட்சுமி, ராம் குமாா், சுரேந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.