மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :29 மே 2025, 6:32 pm

Din

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 33,445 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில், அதன்மூலம் ரூ.3.97 கோடி கிடைத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு, அதாவது தரிசனத்துக்கு டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இதேபோல், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்படுகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.