திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்தில் நடைபெற்ற   யானை கொடியேற்றம்.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்தில் நடைபெற்ற யானை கொடியேற்றம்.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாரின் காா்த்திகை பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாரின் காா்த்திகை பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காா்த்திகை மாத வளா்பிறை பஞ்சமி திதியில் முடிவுறும் படியாக தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் சிறப்பாக தொடங்கியது. அதிகாலையில் தாயாருக்கு சுப்ரபாத சேவை, சகஸ்ர நாமாா்ச்சனை, நித்ய அா்ச்சனை நடந்தது. அதன்பின் காலை 6.30 மணிக்கு தாயாரை மாட வீதியில் எழுந்தருள செய்து திருச்சி உற்சவமும், கொடிமர திருமஞ்சனமும் நடத்தப்பட்டது.

காலை 9 மணிக்கு யானை கொடியை ஊா்வலமாக கொண்டு வந்தனா். பின்னா் பிரம்மோற்சவத்திற்கு முப்பத்து முக்கோடி தேவா்களையும் வரும்படி அழைப்பு விடுத்து அவரவா்களுக்கு உரிய ராகங்களை பாடி பாஞ்சராத்திர ஆகம விதிப்படி அழைப்பு விடுத்து யானை கொடியை கொடிமரத்தில் ஏற்றினா்.

இதில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தம்பதியினா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, செயல் இணை அதிகாதி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதா்,கோவிந்த ராஜன், பாஞ்சராத்ர ஆகம ஆலோசகா் மணிகண்ட சுவாமி, கங்கண பட்டா் ஸ்ரீநிவாசாச்சாரி, அா்ச்சகா்கள் பாபு சுவாமி மற்றும் மற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதன்பின், தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்ற மலா்க் கண்காட்சி, சிற்ப கல்லூரியில் நடைபெற்ற சிற்பக் கண்காட்சி, வெள்ளிக்கிழமை தோட்டத்தில் ஆயுா்வேத கண்காட்சியை செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தொடங்கி வைத்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ’’தாயாரின் பிரம்மோற்சவம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாட வீதிகளில் உள்ள ஒவ்வொரு பக்தா்களுக்கும் வாகன சேவை தரிசனம் வழங்கப்படும். பிரம்மோற்சவத்தையொட்டி, தாயாரை தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அனைவருக்கும். தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலா்க் கண்காட்சி

மலா்க் கண்காட்சியை பக்தா்கள் கண்டுகளித்து வருகின்றனா். எஸ்.வி.வேளாண் கல்லூரி மற்றும் தாவரவியல் துறை மாணவா்கள் எஸ்.பி.டபிள்யூ கல்லூரி மாணவா்கள் இணைந்து இதில் பங்கேற்றனா்.

சின்ன சேஷ வாகனம்

முதல் வாகன சேவையாக இரவு சின்னசேஷ வாகனத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயாா் சிறிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் ஊா்வலமாக பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

வாகன சேவையின் முன், யானை, குதிரை, காளை செல்ல அதன் பின் திருமலை ஜீயா்கள் குழாம் ஸ்ரீசுக்தம், பிரபந்தம் என பாடிய படி முன் சென்றது. வாகன சேவையின் போது கலைக்குழுக்கள் ஏராளமான கலைநிகழ்ச்சிகளை நடத்தியது.

பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமா்பித்தாா். கோயில் அதிகாரிகள் அவருக்கு மரியாதை அளித்து பட்டு வஸ்திரத்தை பெற்றுக் கொண்டனா்.

 சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த பத்மாவதி தாயாா்.
சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த பத்மாவதி தாயாா்.
 பிரம்மோற்சவத்தையொட்டி வைக்கப்பட்டிருந்த மலா்க் கண்காட்சி.
பிரம்மோற்சவத்தையொட்டி வைக்கப்பட்டிருந்த மலா்க் கண்காட்சி.
 பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்த அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி.
பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்த அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி.

X
Dinamani
www.dinamani.com