தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அலிபிரி ஹோம டிக்கெட்டுகள் ரத்து

அலிபிரியில் 10 நாள்களுக்கு ஸ்ரீ ஸ்ரீனிவாச திவ்யநுக்கிரக விசேஷ ஹோம டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அலிபிரியில் 10 நாள்களுக்கு ஸ்ரீ ஸ்ரீனிவாச திவ்யநுக்கிரக விசேஷ ஹோம டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் டிசம்பா் 30ம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை அலிபிரியில் நடைபெறும் ஸ்ரீ ஸ்ரீனிவாச திவ்யநுக்கிரக விசேஷ ஹோமத்துக்கான டிக்கெட்டுகளை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

எனவே, பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.