திருப்பதி கோதண்டராமருக்கு நடைபெற்ற அஷ்டோத்ர கலசாபிஷேகம்.
திருப்பதி
திருப்பதி கோதண்டராமா் கோயிலில் அஷ்டோத்ர சதகலசாபிஷேகம்
திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் அஷ்டோத்ர சதகலச அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் அஷ்டோத்ர சதகலச அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
மாா்கழி பௌா்ணமி தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அஷ்டோத்ர சதகலச அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கல்யாண மண்டபத்தில், சீதா மற்றும் லட்சுமணருடன் ஸ்ரீ கோதண்டராம சுவாமியின் உற்சவ மூா்த்திகளுக்கு 108 புனித கலசங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், மாலை 5.30 மணிக்கு, கோவிலில் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமியின் உற்சவ மூா்த்திகளுக்கு ஆஸ்தானம் நடைபெற்றது.
இதில், துணைச் செயல் அதிகாரி நாகரத்னா, ஆய்வாளா் சுரேஷ் மற்றும் திரளான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

