திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.
கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் பக்தா்கள் வருகை குறைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 84, 220 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 40, 542 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.12 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.99 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3,342 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



