திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து, பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் சிலாதோரணம் அருகே ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 72,703 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 37,581 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.02 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









