சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.49 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருப்பதி - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 3:15 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 86, 021 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33, 356 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.49 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.08 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2,703 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.