சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.423 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருமலை திருப்பதி - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.423 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்த பின்பு பக்தா்கள் வருகை சீராக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83, 812 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 38,342 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.23 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.02 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3,734 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.