ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகள் ரத்து குறித்து...

Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Published On :28 ஜூன் 2026, 10:46 am IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்களின் நலன்கருதி, நாளை ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். இதனால், பக்தர்களின் நலன்கருதி, நாள்தோறும் இணையவழியில் முன்பதிவு செய்து வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் நாளை (ஜூன் 29) ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், விஐபி பிரேக் தரிசனங்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், விஐபி தரிசனத்துக்கான எந்தவொரு பரிந்துரைக் கடிதங்களும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆகையால், இந்த மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆன்மிக பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Summary

TTD cancels VIP break and Srivani Darshan at Tirumala as rush spikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.