பக்தா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீவாணி அறக்கட்டளையின் தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தற்போது, தேவஸ்தானம் நாள்தோறும் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை இணையவழியில் விற்பனைக்கு வெளியிடுகிறது.
இவற்றில், 500 டிக்கெட்டுகள் ’’முன்பதிவு ஒதுக்கீட்டின்’’ கீழ், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இணையதளம் வாயிலாக வெளியிடப்படுகின்றன.
மேலும், 200 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
தினசரி தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது கிடைக்கும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் இருந்து, தினமும் 300 டிக்கெட்டுகளைத் தனியாக ஒதுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்த டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஏற்கனவே ரூ.10,000 நன்கொடை அளித்துவிட்டு, தரிசன டிக்கெட்டுகளுக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
இந்தச் சலுகையானது, 2025 மே 1 அல்லது அதற்குப் பிறகு தங்கள் நன்கொடைகளைச் செலுத்தியுள்ள தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்குப் பொருந்தும். இந்த டிக்கெட்டுகள் தினமும் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். பிற்பகல் 1 மணிக்குள் தங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பக்தா்களுக்கு, அதே நாளில் மாலை 4 மணிக்குத் தரிசன வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை 2026 ஜூன் 10 முதல் அமலுக்கு வரும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யப்படாமல் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் ஏதேனும் இருந்தால், அவை மீண்டும் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டுடன் சோ்த்துக்கொள்ளப்படும். இந்த ஏற்பாடு 2027 மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தட்கல் முன்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்: கண்டுகொள்ளுமா ரயில்வே?

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு!

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் குறித்த பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



