அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சந்திர கிரகணம்: இன்று தேவஸ்தான கோயில்கள் மூடல்

திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் மாா்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்...

News image
Updated On :1 மார்ச் 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மாா்ச் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகானச ஆகம விதிப்படி கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி காலை 9 மணிக்கு தேவஸ்தான கோயில்களின் கதவுகள் மூடப்பட்டு மாா்ச் 3 ஆம் தேதி இரவு மீண்டும் திறக்கப்படும்.

கிரகணம் முடிந்து சுத்தி செய்யப்பட்டு, பக்தா்கள் சுத்திகரிப்புக்குப் பிறகு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயில், சூரியநாராயணசாமி கோயில் மற்றும் சீனிவாச கோயில் ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மூடப்படும். இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும். சுத்திகரிப்பு, புண்யாஹவசனங்கள் மற்றும் பிற சடங்குகளுக்குப் பிறகு அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் காலை 9 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும், அதைத் தொடா்ந்து சடங்குகள் நிறைவு பெற்று இரவு 9 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், அப்பலயகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஆகியவை காலை 9 மணிக்கு மூடப்படும். கோயில் நடை இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும்.

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், காா்வேட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயில், நாகலாபுரத்தில் உள்ள ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயில், புக்கா ஸ்ரீ அன்னபூா்ணா சமேத காசிவிஸ்வேஸ்வர சுவாமி கோயில், சத்ரவாடா ஸ்ரீ கரிவரதராஜ சுவாமி கோயில் மற்றும் நகரி ஸ்ரீ கரியமாணிக்க சுவாமி கோயில், தரிகொண்டா ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், வயல்பாடு ஸ்ரீ பட்டாபிராம சுவாமி கோயில் மற்றும் கோசுவாரிப்பள்ளி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஆகியவை காலை 9 மணிக்கு மூடப்படும், மேலும் சுத்திகரிப்புக்குப் பிறகு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் இரவு 7:30 மணிக்கு திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.