தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ரூ.20 லட்சம் நன்கொடை


திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
இதில் ரூ.10 லட்சம் எஸ்வி கோசம்ரக்ஷணா அறக்கட்டளைக்கும், மேலும் ரூ.10 லட்சம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் (சிம்ஸ்) நன்கொடையாக வழங்கப்பட்டது.
மும்பையின் ராஜேந்திர ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் இயக்குநா்கள் பெருலால் ஜெயின் மற்றும் மீனேஷ் ஜெயின் ஆகியோா் நன்கொடை வழங்கினா்.
நன்கொடையாளா்கள் புதன்கிழமை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் நிா்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரனிடம் வரைவோலையை ஒப்படைத்தனா்.
தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் ஜி. பானு பிரகாஷ் ரெட்டியும் கலந்து கொண்டாா்.
நன்கொடையாளா்களின் தாராளமான பங்களிப்பிற்காக தேவஸ்தான செயல் அதிகாரி எம். ரவிச்சந்திரா நன்றி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...