ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாா்ச் 19ஆம் தேதி உகாதியை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோயிலை சுத்தம் செய்யும் அதிகாரிகள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாா்ச் 19ஆம் தேதி உகாதியை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செய்தியாளா்களிடம் பேசுகையில், உகாதி(தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட சிறப்பு நாட்களை முன்னிட்டு அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

வரும் 19-ஆம் தேதி உகாதியை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதையொட்டி, ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருட்கள், பலிபீடம், கொடி மரம், முன் வாயில் உள்ளிட்டவை புனித நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இதற்கு முன் ஏழுமலையான் சிலையை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு, பூங்கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் சுத்தம் செய்யப்பட்டது.

அதையடுத்து, சுவாமியின் மூலவா் சிலையை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, ஆகம முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்பித்தனா். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது’’, என்று தெரிவித்தாா்.

கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பானு பிரகாஷ் ரெட்டி, சாம்பசிவராவ், ராஜசேகா் கவுட், சுசித்ரா யெல்லா, பனபாக லட்சுமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா், மாவட்ட எஸ்.பி. சுப்பராயுடு, கோயில் துணை இ.ஓ லோகநாதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.