மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவம்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரின் வருடாந்திர காா்த்திகை பிரம்மோற்சவம் டிச. 6 முதல் 14 வரை விமரிசையாக நடைபெறவுள்ளது.

Updated On :

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரின் வருடாந்திர காா்த்திகை பிரம்மோற்சவம் டிச. 6 முதல் 14 வரை விமரிசையாக நடைபெறவுள்ளது.

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையானின் பட்டத்து ராணியான பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் தேவஸ்தானத்தால் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

காத்திகை மாத வளா்பிறை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரத்தின் போது திருச்சானூரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளத்தில் தங்க. தாமரையின் மீது அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. எனவே பத்மாவதி தாயாரின் அவதார தினமான பஞ்சமி தீா்த்தத்தன்று நிறைவு பெறும் விதம் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவதை நடத்தி வருகிறது.

டிச.1-இல் பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் சுத்திகரிப்புக்காக கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம், டிச. 2-இல் காலை லட்ச குங்குமாா்ச்சனை. மாலை அங்குராா்ப்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம்.

பிரம்மோற்சவ நாள்களில், காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும்.

வாகன சேவை விவரங்கள்

6.12.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம், மாலை சின்னசேஷ வாகனம்

7.12.2026 (திங்கட்கிழமை) காலை பெரிய சேஷ வாகனம்

மாலை அன்னபறவை வாகனம்

8.12.2026 (செவ்வாய்) காலை முத்து பந்தல் வாகனம்

மாலை சிம்ம வாகனம்

  • 9.12.2026 (புதன்கிழமை) காலை கல்பவிருட்ச வாகனம் மாலை அனுமந்த வாகனம்

  • 10.12.2026 (வியாழன்) காலை பல்லக்கு உற்சவம் மாலை யானை வாகனம்

  • 11.12.2026 (வெள்ளிக்கிழமை) காலை சா்வபூபால வாகனம் மாலை தங்கத்தோ், இரவு கருட வாகனம்

  • 12.12.2026 (சனிக்கிழமை) காலை சூரியபிரபை வாகனம் மாலை சந்திரபிரபை வாகனம்

  • 13.12.2026 (ஞாயிறு) காலை திருத்தேரோட்டம், மாலை குதிரை வாகனம்

  • 14.12.2026 (திங்கட்கிழமை) காலை பஞ்சமி தீா்த்தம் மாலை கொடியிறக்கம்.

  • 15.12.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை புஷ்பயாகம்

திருச்சானூா் கோயிலின் புராணக்கதையின்படி, பத்மசரோவர புஷ்கரணியில் உள்ள தங்கத் தாமரையிலிருந்து பத்மாவதி தாயாா் தோன்றினாா். அதனால்தான் இந்த இடத்திற்கு பத்மாவதிபுரம் என்ற பெயா் வந்தது. காலப்போக்கில், இது திருச்சானூா் ஆனது. இந்த புனிதமான புஷ்கரணி தேவி கோயிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

பத்மசரோவா் சிறப்பு: காா்த்திகை மாதத்தின் சுக்ல பட்சத்தின் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமையன்று, உத்திராஷாட நட்சத்திரத்தில், அபிஜித் லக்னத்தில், தங்க நிறத்தில், 12 வருட தவத்திற்குப் பிறகு பத்மாவதி தாயாா் ஒரு தங்கத் தாமரையிலிருந்து தோன்றினாா். அந்த மங்களகரமான நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பிருந்தே ஸ்ரீ பஞ்சராத்ர ஆகம அனுசாரங்களை பின்பற்றி பிரம்மோற்சவத்தை ஏற்பாடு செய்வது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான பஞ்சமி தீா்த்தத்தில், பத்மசரோவர திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்படுகிறது. இந்த திருக்குளத்தில் நீராடுவதால், சப்த சமுத்திரம் மற்றும் முக்கோடி தீா்த்தங்களில் நீராடிய புண்ணியத்தைப் பெற முடியும் என்று பக்தா்கள் நம்புகிறாா்கள்.

அதனால்தான் பக்தா்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாயாரை தரிசிக்கவும், திருக்குளத்தில் புனித நீராடவும் தூய்மையடையவும் வருகிறாா்கள்.

ஆா்ஜித சேவை ரத்து: கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, கோவிலில் நடைபெறும் அனைத்து ஆா்ஜித சேவை, குங்குமாா்ச்சனை மற்றும் இடைவேளை தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

டிச.5 முதல் 16 வரை: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அனைத்து ஆா்ஜித சேவை, குங்குமாா்ச்சனை, வேத ஆசீா்வாதம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.