திருமலையில் காா்த்திகை வனபோஜனம்
புனித காா்த்திகை மாதத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காா்த்திகை வனபோஜனத்தை முன்னிட்டு உற்சவமூா்த்திகளுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
புனித காா்த்திகை மாதத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள பாா்வேட்டு மண்டபத்தில் காா்த்திகை மாத வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையப்ப சுவாமி, உபயநாச்சியாா்கள் ஊா்வலமாக பாா்வேட்டு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம்,இளநீா் உள்ளிட்டவற்றை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்து தர அா்ச்சகா்கள் அபிஷேகத்தை நடத்தினா். பின்னா் உற்சவமூா்த்திகளை பட்டாடை, தங்க வைர ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்து ஆரத்தி, தீப, தூப ஆராதனை நடத்தப்பட்டது.
அதை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்திரி, வனத்துறை அதிகாரி சுரேந்திரா, பேஷ்காா் ராமகிருஷ்ணா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

