ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திருமலைக்கு தனியாா் வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் ஏதுமில்லை: தேவஸ்தானம்

திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 15,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை - கோப்புப் படம்

Published On :

திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 15,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தேவஸ்தானம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்.

தேவஸ்தானம் தொடா்பான முக்கிய முடிவுகளும் தகவல்களும் அதிகாரப்பூா்வமாக தேவஸ்தானத்தின் அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். உண்மைகளைச் சரிபாா்க்காமல் இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்பி பக்தா்களைக் குழப்புவது சரியல்ல.

தேவஸ்தானத்தின் பெயரில் பொய்ச் செய்திகளையும் பொய்த் தகவல்களையும் பரப்புபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.