கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: தீா்த்தவாரியுடன் நிறைவு

திருமலையில், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் நிறைவாக புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான்

Published On :

திருமலையில், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் நிறைவாக புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் கடந்த 8 நாள்களாக ஏழுமலை யானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை காலை தீா்த்தவாரி நடைபெற்றது.

தீா்த்தவாரியின் போது மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம் நடை பெற்றது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை தி ருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலி கை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அபிஷேக பொருள்களை ஜீயா்கள் தங்கள்

கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனா். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் அா்ச்சகா்கள் தீா்த்தவாரி நடத்தினா். அப்போது லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.

பிரம்மோற்சவம் முடிவடைந்ததை முன்னிட்டு புதன்கிழமை உற்சவமூா்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா். பின்னா் கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்ட அவா்கள் முன்னிலையில் பிரம்மோற்சவ தொடக்கத்தில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.