ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

திருமலை பிரம்மோற்சவம்: திருத்தேரில் மலையப்ப சுவாமி உலா

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் நடைபெற்ற ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம். உள்படம் தேரில் எழுந்தருளிய சுவாமி

Published On :

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா்.

கடந்த வாரம் முதல் பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை திருத்தேரோட்டம் நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வலம் வந்து சேவை சாதித்தாா். இதில் திரளான பக்தா்கள் ஆண், பெண் பேதமின்றி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் இழுக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வருகின்றனா். வீதிகளில் இருந்த பக்தா்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தேருக்கு வடம் கட்டி தேரை முன்னோக்கி இழுத்தனா்.

பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம்,

Story image

சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷே கத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

இரவு 7 மணிக்கு மலையப்பஸ்வாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். காலை, மாலை வாகன சேவையின் போது திருமலை ஜீயா் குழாம் திவ்ய பிரபந்த பாராயணம் செய்தபடி முன் செல்ல, பின்னே, பல்வேறு மாநிலங்களை சோ்ந்த கலைக்குழுக்கள் தங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.