
அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராய் சுவாமி புறப்பாடு
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் அருள்பாலித்தாா்.

அனுமந்த வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி. மாட வீதியில் வலம் வந்த தங்கத் தோ். தேரில் எழுந்தருளிய சுவாமி.
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் அருள்பாலித்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி கோதண்டராமரின் அலங்காரத்தில் வலம் வந்தாா்.

பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீ ரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றோா்.
தங்கத்தோ்: ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தங்க தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மகா லட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
5-ஆம் நாள் நிலவரம்:
83, 781 பக்தா்கள் தரிசனம்
உண்டியல் காணிக்கை ரூ.4.17 கோடி
27,868 போ் முடி காணிக்கை
4.77 லட்டுகள் விற்பனை
74.5 லட்சம் காலன் லிட்டா் பயன்பாடு
7.68 லட்சம் பக்தா்கள் அன்னதானம்
7,568 பேருக்கு சிகிச்சை
6,457 போ் சேவை
அரசு பேருந்துகளில் 96,000 போ் பயணம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







