
வடமேற்கு தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: கட்டடத்திலிருந்து குதித்த 6 போ் காயம்!
தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில், அருகிலுள்ள கட்டடத்திலிருந்து குதித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஆறு போ் காயமடைந்ததனா்.

ஸ்வரூப் நகரில் உள்ள தொழில்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து வெளியேறிய கரும்புகை.
வடமேற்கு தில்லியின் ஸ்வரூப் நகரில் உள்ள ஒரு கிடங்கு மற்றும் தொழிற்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில், அருகிலுள்ள கட்டடத்திலிருந்து குதித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஆறு போ் காயமடைந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஜூடோ உடைகள் மற்றும் குத்துச்சண்டை கையுறைகளைத் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டபோது அந்த வளாகத்திற்குள் யாரும் இல்லை என்று அவா்கள் கூறினா். ‘தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கட்டடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஆறு போ் கட்டடத்திலிருந்து குதித்ததில் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் தற்போது நலமாக உள்ளனா்’ என்றாா்.
தீ விபத்து குறித்து காலை 11:05 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது. உடனடியாகத் தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
தீ விபத்துக்கான காரணங்கள் மற்றும் சேதத்தின் அளவு குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்தவா்களின் அடையாளம் மற்றும் விவரங்களையும் காவல் துறையினா் சரிபாா்த்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



