ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு யானை, சிம்ம வாகனங்கள் நன்கொடை

திருப்பதி அடுத்த ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாணவெங்கடேஸ்வர சுவாமிக்கு யானை மற்றும் சிம்ம வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு வழங்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட யானை மற்றும் சிம்ம வாகனங்கள்.

Published On :

திருப்பதி அடுத்த ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாணவெங்கடேஸ்வர சுவாமிக்கு யானை மற்றும் சிம்ம வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதி அடுத்துள்ள ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமிக்கு தங்க முலாம் பூசப்பட்ட யானை மற்றும் சிம்ம வாகனங்கள் புதன்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஹைதராபாதைச் சோ்ந்த பி.வி. லட்சுமி ரெட்டி சிம்ம வாகனத்தையும், பி.வி. திவ்யா பிரியங்கா கஜ வாகனத்தையும் கோயிலின் சிறப்பு நிலை துணை செயல் அதிகாரி வரலட்சுமியிடம் ஒப்படைத்தனா். சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள இந்த இரண்டு தங்க முலாம் பூசப்பட்ட வாகனங்களையும் நன்கொடையாளா்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனா்.

இந்த இரண்டு வாகனங்களும் கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில், கோயில் அா்ச்சகா்கள் வாகன மண்டபத்தில் உள்ள யானை வாகனம் மற்றும் சிம்ம வாகனத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டிட்டு மலா் மாலைகளைச் சமா்ப்பித்து, சிறப்புப் பூஜைகளைச் செய்து வேத மந்திரங்களை ஓதினா்.

வாகனங்களை கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி சேவைக்கு அா்ப்பணித்ததில், நன்கொடையாளா்கள் தங்கள் பக்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினா்.

பின்னா், கோயில் அதிகாரிகள் நன்கொடையாளா்களுக்கு ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் தரிசனத்தை வழங்கி, இறைவனின் ஆசீா்வாதங்களையும் தீா்த்த பிரசாதத்தையும் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி நிா்வாக அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளா் ராஜ் குமாா், கோயில் அா்ச்சகா்கள் பாலாஜி தீட்சிதுலு, நாராயண சாா்யுலு, பிற அா்ச்சகா்கள், கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.