ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மருத்துவரை தாக்கிய வழக்கு இருவருக்கு 7 ஆண்டு சிறை

ஆரணி அருகே மருத்துவரை தாக்கியதாக 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:58 pm

தினமணி

ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ்கண்ணா.

கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி அணைப்பேட்டையைச் சேர்ந்த எம்ஜிஆர் (65), கருங்காலிகுப்பத்தைச் சேர்ந்த பழனி (42) ஆகிய இருவரும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிடம் சென்று, விபத்தில் காயம் அடைந்த சிலருக்கு சிகிச்சை அளிக்கும்படி அழைத்தனராம்.

அப்போது காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு கூறிய மருத்துவரை இருவரும் தாக்கினராம்.

புகாரின்பேரில் களம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆரணி உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கணேசன் சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.