இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலைப் பணி: தீபத் திருவிழாவுக்குள் முடிக்க பாமக வலியுறுத்தல்

திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையிலான சாலைப் பணியை திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது.

Updated On :

திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையிலான சாலைப் பணியை திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த தெற்கு, மேற்கு மாவட்ட பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரையில் போடப்படும் இருவழிச் சாலைப் பணியை கார்த்திகை தீபத் திருவிழாவுக்குள் செய்து முடிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத் தொடரிலேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் ச.பாண்டுரங்கன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் அ.லோகநாதன், மாவட்டச் செயலாளர் லோ.சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.