சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

உயிரிழந்த ஆண் யானை.
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
சென்னம்பட்டி வனச் சரகம், கொமராயனூா் பீட், பாப்பம்மாள் குட்டை பகுதியில் ரோந்து சென்ற வனப் பாதுகாவலா்கள், அங்கு காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயிரிழந்தது சுமாா் 20 வயதுள்ள ஆண் யானை என்பதும், சுமாா் 4 அடி தந்தங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யானையை மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத் துறை கால்நடை மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை உடல்கூறு ஆய்வு செய்கின்றனா். இதன் பின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

