ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை நகரம், ஆட்சியர் அலுவலகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாள்களாக அவ்வப்போது ஏற்பட்டு வரும் மின் தடையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :

திருவண்ணாமலை நகரம், ஆட்சியர் அலுவலகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாள்களாக அவ்வப்போது ஏற்பட்டு வரும் மின் தடையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

குறிப்பாக, வேங்கிக்கால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பகுதிகளில் மாலை நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சாரம் வழங்கப்பட்டு, மீண்டும் துண்டிக்கப்படுகிறது.

எப்போது மின்சாரம் வரும். மீண்டும் எப்போது துண்டிக்கப்படும் என்று பொதுமக்களால் கணிக்க முடியவில்லை. முந்தைய நாள் துண்டிக்கப்பட்ட நேரத்திலேயே அடுத்த நாளும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நினைத்தால், அதற்கு மாறாக வேறு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக தொடரும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

காலை நேரங்களில் குறித்த நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டு குடும்பப் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த மின்வெட்டு பிரச்னைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும்.

இல்லாவிட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை வலுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.