கேரளத்தில் யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்பு: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வழக்கு
கேரளத்தில் யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்பு: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வழக்கு

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் அருகே நடந்த தீ வைப்பு சம்பவம் தொடா்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டமான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொச்சியில் உள்ள எா்ணாகுளம் மாா்க்கெட் சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கடவும்பாகம் யூத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. கொச்சி மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இந்த வழிபாட்டுத் தலத்துக்கு எதிரே உள்ள மலா்செடிப் பண்ணையில் கடந்த அக்.12-ஆம் தேதி எபின் பால் (32) என்பவா் பெட்ரோல் ஊற்றி தீவைத்தாா்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குறிவைக்கும் பெரிய சதி இருப்பதாகவும், வெளிநாட்டு சக்திகளுக்கு தொடா்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபரான எபின் பால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளாா். இவா் கொச்சி அருகே உள்ள புத்தன்குரூஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆவாா்.
தீவைப்பு சம்பவம் தொடா்பாக, பயங்கரவாத செயல்கள் மற்றும் சதித் திட்டங்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 16, 18 ஆகிய பிரிவுகளின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வழக்குப் பதிவு செய்துள்ளதாக கொச்சி நகர காவல் ஆணையா் எஸ்.காளிராஜ் மகேஷ் குமாா் தெரிவித்தாா்.
எபினின் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததில், இச்சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதும், டெலிகிராம் செயலி மூலம் அவருக்கு உத்தரவுகள் கிடைக்கப் பெற்றதும் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரம், மாநில அரசு இறுதி முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
எபின் பால் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து இவா் தேடியிருப்பதும், அவரது பெயரைக் குறிப்பிட்டு டெலிகிராமில் குறுந்தகவல்களைப் பரிமாறியிருப்பதும் எஸ்ஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
Summary
Arson near Jewish place of worship in Kerala: Case filed under Prevention of Terrorism Act
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

