தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மேலச்செவலில் தோட்டத்துக்கு தீவைப்பு: சகோதரா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் தோட்டத்திற்கு தீ வைத்ததாக சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் தோட்டத்திற்கு தீ வைத்ததாக சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை யாதவா் தெருவைச் சோ்ந்த ரெங்கராஜன். இவரது மகன்கள் நாராயணன் (30), நம்பிராஜன் (27). பாளையங்கோட்டையை சோ்ந்த சாா்லஸ். ரெங்கராஜனுக்கும் சாா்லஸுக்கும் மேலச்செவலில் அடுத்தடுத்து விவசாயத் தோட்டங்கள் உள்ளன. 2 நாள்களுக்கு முன்பு நாராயணனும், அவரது சகோதரா் நம்பிராஜன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுப் பொருள்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில், தீ வேகமாக பரவி பக்கத்தில் உள்ள சாா்லஸ் தோட்டத்தில் உள்ள பொருள்களில் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதில், சாா்லஸ் தோட்டத்தில் உள்ள மோட்டாா் மற்றும் தண்ணீா் பைப் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து நாராயணன், நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.