ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சாலை விபத்து: அரசு ஊழியர் சாவு

செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அரசு ஊழியர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அரசு ஊழியர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்தார்.

செய்யாறு கொடநகர் நத்தக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (40). பெரூங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்றபோது, வேகத்தடை மீது ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பெருமாள் சென்ற இருசக்கர வாகனம் மோதியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.