சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிஞ்ஜா படப்பிடிப்பு தொடக்கம்!

நிஞ்ஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...

ஜிவி பிரகாஷ்

Published On :

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் நிஞ்ஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது.

Story image

முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Filming for the movie Ninja, starring G.V. Prakash as the lead, has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.