
சார்பட்டா - 2 ஆரம்பம்! போஸ்டர் வெளியீடு!
சார்பட்டா -2 திரைப்படம் ஆரம்பம்...

நடிகர் ஆர்யா நடிக்கும் சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது, பா. இரஞ்சித் சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இது சார்பட்டா பரம்பரை முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக உருவாகிறது. இதன் காரணமாக, ஆர்யா உடல் எடையைக் குறைத்து இளவயது குத்துச்சண்டை வீரராகவும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், தி ஆர்ஜின் ஆஃப் சார்பட்டா - 2 (the origin of sarpatta) எனப் பெயரிட்ட இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Filming for the movie Sarpatta 2, starring actor Arya, has begun in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






