
என்ன நடந்தது எனத் தெரியாமல் பேசாதீர்கள்... இலங்கை வீரருடனான மோதலுக்கு ஜெய்ஸ்வால் பதில்!
அசிதா பெர்னான்டோ உடனான மோதல் குறித்து ஜெய்ஸ்வால் கூறியிருப்பது குறித்து...

அசிதா பெர்னான்டோ - ஜெய்ஸ்வால் மோதல் - படம்: ஏபி
இலங்கை வீரர் அசிதா பெர்னான்டோ உடனான மோதல் குறித்த விமர்சனங்களுக்கு இந்திய வீரர் ஜெய்ஸ்வால், “எதுவும் தெரியாமல் பேசாதீர்கள்” என பதில் அளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (ஆக.23) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இரண்டாம் நாள் தேநீர் முடிவு வரைக்கும் இந்திய அணி 475 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னான்டோ ஏதோ கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அது மோதலுக்கும் இட்டுச் சென்றது.
இலங்கை வீரரை தனது ஹெல்மெட்டால் இடிக்க சென்ற ஜெய்ஸ்வால் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது குறித்து கிரிக்பஸ் தனது இன்ஸ்டாவில் விடியோ வெளியிட்டிருந்தது.
அந்த விடியோவில் பிரபலமான வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “அவர் என்ன பேசியிருந்தாலும் ஜெய்ஸ்வால் அமைதியாக நடந்து வந்திருக்க வேண்டுமென நான் கூறுவேன்” என்றார்.
இந்த விடியோவின் கீழ் ஜெய்ஸ்வால், “அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை என்றால் நீங்களாக ஒன்றை முடிவெடுத்து பேசாதீர்கள். யாராவது தங்களது எல்லையை மீறினால் இந்தியர்களாகிய நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்றார்.
Jaiswal and Asitha Fernando pic.twitter.com/peqfQQkteM
— SRI LANKA CRICKET LIONS (@slcricketlions) August 23, 2026
Summary
Jaiswal hits back at criticism over Fernando altercation, says 'don't judge' without knowing context
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





