அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

மாமனார், மருமகள் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

வேட்டவலம் அருகே மாமனார், மருமகளைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :10 நவம்பர் 2016, 7:55 am IST

வேட்டவலம் அருகே மாமனார், மருமகளைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலத்தை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பேருந்து நடத்துநர் ஜெயவேல் (35).
இவரது மனைவி அலமேலு (28). இதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஏழுமலை (33). அலமேலுவிடம் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வீண் தகராறு செய்தாராம்.
சப்தம் கேட்டு வந்த அலமேலுவின் மாமனார் ரங்கநாதன், ஏழுமலையை தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அவர், அலமேலுவை ஆபாசமாக திட்டியதுடன் தாக்கினாராம். இதைத் தடுக்கச் சென்ற ரங்கநாதனை ஏழுமலையின் தந்தை பூமிநாதன் (51) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப்பதிந்து ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.