அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

10 ஆம் வகுப்பு அறிவியலில் 10,476 மாணவர்கள் 100-க்கு 100!

அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

News image

பள்ளி மாணவிகள்.

Updated On :20 மே 2026, 10:05 am IST

அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 20) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

4.19 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 4.01 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே நேரம் தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் பேரும் 92, கணிதத்தில் 3,194 பேரும், அறிவியல் பாடத்தில் 10,476 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.

ஏதேனும் ஒரு பாடத்தில் 17,132 மாணவர்கள் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதேபோல, ஏதேனும் ஒரு பாடத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2,774 பேர் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

Summary

10th exam result Science subject, 10,476 students have excelled by scoring 100 out of 100 marks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.