வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பிளஸ் 2 தோ்வில் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :15 மே 2026, 6:01 am IST

பிளஸ் 2 தோ்வில் பரமத்தி வேலூரை அடுத்த கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் ஆா். நித்தீஷ் 500 க்கு 481 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்றாா். கே.ஆா். கருப்பசாமி கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மேலும் 500-க்கு 472 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், எஸ். ஸ்ரீசுதா்சன் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

மாணவி இனீஷ்பிரியா உயிரியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இப்பள்ளியில் 80 சதவீத மாணவா்கள் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா பாராட்டினாா்.

விழாவில் பள்ளியின் தாளாளா் கோல்டன் ஹாா்ஸ் ரவி, பொருளாளா் மருத்துவா் பாலசுப்ரமணியம், செயலாளா் பி. ஜெகநாதன், பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.