எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீடு இடிந்து உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்  நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்

ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடர்பாடு நிவாரண நிதி

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:12 am

DIN

ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடர்பாடு நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினார்.
ஆரணியை அடுத்த மேல் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு. இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு நித்யா (13), ஆனந்தி (11) என 2 மகள்கள் இருந்தனர்.
கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த சத்யா, தனது மகள்களுடன் ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
லாடப்பாடி அருகே உள்ள கல்பூண்டி அரசுப் பள்ளியில் நித்யா 9-ஆம் வகுப்பும், ஆனந்தி 2-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கம்போல அனைவரும் சாப்பிட்டு விட்டு குடிசை வீட்டில் படுத்துத் தூங்கினர். இரவில் பலத்த மழை பெய்ததால், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடு திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில், இடிபாடுகளில் சிக்கிய நித்யா, அவரது தாத்தா பாக்கியநாதன் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பாட்டி மல்லிகா, சத்யா, தாய்மாமன் சத்யராஜ், ஆனந்தி ஆகிய 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். உயிருக்கு போராடிய நித்யாவை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து, ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவி நித்யாவின் குடும்பத்துக்கு இடர்பாடு நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். உடன், கோட்டாட்சியர் கிருபானந்தம், செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், வட்டாட்சியர் சுப்பிரமணி, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, நகர நிர்வாகி பாரிபாபு ஆகியோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.