பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மருந்து கட்டுப்பாட்டுத் துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து செய்யாறில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. ஊர்வலத்துக்கு

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:26 am

DIN

மருந்து கட்டுப்பாட்டுத் துறை, மருந்து வணிகர் சங்கம் இணைந்து செய்யாறில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. ஊர்வலத்துக்கு வேலூர் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் பானுமதி தலைமை வகித்தார்.
செய்யாறு பெரியார் சிலை அருகே தொடங்கிய ஊர்வலத்தில் மருந்து ஆய்வாளர்கள் இமானுவேல், நேசகுமார், சரண்யா, மகாலட்சுமி, தெய்வானை, ஹேமலதா, மருந்து வணிகர் சங்கத் தலைவர் பாஸ்கர், செயலர் பிரேம்குமார், பொருளாளர் ஜெயச்சந்திரன், ராந்தம் ஆதிபகவன் மருந்தியல் கல்லூரி, செய்யாறு செயின்ட் மேரீஸ் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இந்த ஊர்வலத்தின்போது, டெங்கு காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.